Wednesday 2 December 2020

எலியோட்டம்

இளமைக்கால இலக்கிய நண்பன் ஒருவனை, பல்கலைக்கழக பணி நிமித்தமாக நான் கிழக்கு ஆபிரிக்க நாடொன்றுக்கு சென்றிருந்த பொழுது சந்தித்தேன். நான் தங்கியிருந்த ஹோட்டலின் நிதிக் கட்டுப்பாட்டாளராக பணிபுரிவதாக அவன் சொன்னான். கல்லூரி நாட்களில் அவனும் நானும் பல ஆக்க இலக்கிய முயற்சிகளில் ஈடுபட்டு வாழ்ந்தோம். பிற மொழி இலக்கியங்களை அவன் நிறையவே வாசிப்பான். மரபுகள் மீறப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம் என்பது அவன் கொள்கை. இது சம்பந்தமாக பலதடவைகள் அவன் கல்லூரி நண்பர்களுடன் முரண்பட நேர்ந்ததும் உண்டு.

இலங்கையில் நடந்த இனக்கலவரம், அதைத் தொடர்ந்த போராட்டம், புலம் பெயரும் நிர்ப்பந்தம் போன்ற பல்வேறு காரணிகளால் நாம் இருவரும்  வெவ்வேறு திசைகளில் பயணித்து விட்டோம். இப்போது இருண்ட கண்டத்தின் நாடொன்றிலே எதிர்பாராத சந்திப்பு.

முடி வெட்டும்போது பிரளி பண்ணும் எனது மகள் வயிற்று, இரண்டு வயதுப் பேரனும் நானும் முடி வெட்டப் போயிருந்தோம். பேரனுக்கு முதல் தடவையாக trimmer பாவித்தார்கள். அது கொடுத்த அதிர்வு (vibration) அவனுக்கு சுகமாக இருந்திருக்க வேண்டும். முடிவெட்டி முடியும்வரை அமைதியாக இருந்தான். இதே மெசினைப் பாவித்து 60 வருடங்களுக்கு முன்னர் சிறுவனான எனக்கும் எங்கள் ஊர் நாவிதர் முடி வெட்டினார். அது கையால் இயக்கும் மெசின். 'டிக் டிக் டிக்' என பிடரியில் ஆரம்பித்தால், காதுக்கு மேலால் வந்து நெற்றியின் பக்கவாட்டில் அந்த மெசின் நிற்கும். 

பேரனுக்கு இக்காலத்தில் கிடைத்த சுகம் எனக்கு அந்தக்காலத்தில் கிடைக்கவில்லை. நாவிதர் மெசினை ஒழுங்காக இயக்காவிட்டால் அது தோலைக் கவ்வும். முடியை இழுக்கும். மெசின் பல்லின் அரைவாசிக்கு ஊரிலுள்ளவர்களின் எண்ணை கலந்த ஊத்தையும் முடித்துண்டுகளும் நிறைந்திருக்கும்.
 
(தொடர்ந்து வாசிக்க Read more இணைப்பை அழுத்தவும்).