Wednesday 2 December 2020

முடி வெட்டும்போது பிரளி பண்ணும் எனது மகள் வயிற்று, இரண்டு வயதுப் பேரனும் நானும் முடி வெட்டப் போயிருந்தோம். பேரனுக்கு முதல் தடவையாக trimmer பாவித்தார்கள். அது கொடுத்த அதிர்வு (vibration) அவனுக்கு சுகமாக இருந்திருக்க வேண்டும். முடிவெட்டி முடியும்வரை அமைதியாக இருந்தான். இதே மெசினைப் பாவித்து 60 வருடங்களுக்கு முன்னர் சிறுவனான எனக்கும் எங்கள் ஊர் நாவிதர் முடி வெட்டினார். அது கையால் இயக்கும் மெசின். 'டிக் டிக் டிக்' என பிடரியில் ஆரம்பித்தால், காதுக்கு மேலால் வந்து நெற்றியின் பக்கவாட்டில் அந்த மெசின் நிற்கும். 

பேரனுக்கு இக்காலத்தில் கிடைத்த சுகம் எனக்கு அந்தக்காலத்தில் கிடைக்கவில்லை. நாவிதர் மெசினை ஒழுங்காக இயக்காவிட்டால் அது தோலைக் கவ்வும். முடியை இழுக்கும். மெசின் பல்லின் அரைவாசிக்கு ஊரிலுள்ளவர்களின் எண்ணை கலந்த ஊத்தையும் முடித்துண்டுகளும் நிறைந்திருக்கும்.
 
(தொடர்ந்து வாசிக்க Read more இணைப்பை அழுத்தவும்).

நாவிதர் வீட்டுக்கு வருவார். பின் வளவு தென்னை மரத்தின் கீழ் நான் குந்த, நாவிதர் பின்னால் குந்தியிருந்து முடி வெட்டுவார். எனக்கேற்றபடி அவர் அரக்கமாட்டார். நான்தான் அவருக்கு ஏற்றபடி உடலையும் தலையையும் திருப்பவேண்டும். எழும்பி எழும்பி குந்தவேண்டும்.

காலம் எப்படி மாறுகின்றது...

No comments:

Post a Comment