Friday, 9 August 2024



அகதியின் பேர்ளின் வாசல் –  ஆசி கந்தராஜா:

ஆசிரியர் குறிப்பு:

யாழ்ப்பாணத்தில் பிறந்தவர்.  ஆஸ்திரேலியாவில் வசிப்பவர்.  ஜெர்மனி, ஜப்பான், ஆஸ்திரேலியப் பல்கலைகளில் பணியாற்றியவர்.  மேலும் ஆசிய, ஆப்பிரிக்க, மத்திய கிழக்குஐரோப்பா நாடுகளில் Visiting Professorஆகப் பணிபுரிந்தவர்.  இது இவரது முதல் நாவல்.

புக்கர், NBA,  புலிட்சர் போன்ற விருதுகளுக்கு வரும் சமகால நாவல்களில்கதையம்சத்தை விட  பின்னணி மற்றும் வரலாற்றுத் தகவல்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப் படுகின்றன.  புக்கர் பரிசை வென்ற Kairos,  இறுதிப்பட்டியலுக்குள் வந்த Crooked Plow, Mater 2-10 ஆகியவை.

வரலாற்றுத் தகவல்களை உள்ளடக்கியவை.  Woman Fiction Prizeஐ இந்தாண்டு வென்ற Brotherless Night இலங்கை நிகழ்வுகளை மையமாகக் கொண்டது.  Burnt Sugar எழுதிய Avni Doshi இந்திய வம்சாவளி என்றாலும் வெளிநாடுகளில் வளர்ந்ததால் இங்கு தங்கியிருந்து ஏழுவருடங்கள் அந்த நாவலுடன் போராடியிருக்கிறார்.  இது போல நூற்றுக்கணக்கான உதாரணங்களைச் சொல்லலாம்.  Contemporary Literatureல்  அல்புனைவுத் தன்மை அதிகமாகி வருகிறது.  அதனாலேயே நாவலுக்கு ஆய்வு முக்கியமாகிறது.  கந்தராஜா கல்விப்புலத்தில் இயங்கியதால் இந்த நூலுக்கான வரலாற்றுத் தகவல்கள் அவருக்கு முன்னரே தெரிந்ததாக இருந்திருக்கும். 

முழுக்கவே கிழக்கு ஜெர்மனியையும், மேற்கு ஜெர்மனியையும் களமாகக் கொண்ட நாவல் இது.  இரண்டாம் உலகப்போருக்குப் பின் ஜெர்மனி நான்கு பகுதிகளாகப் பிரிந்து அதில் மூன்று பகுதி ஒன்றாக மேற்கு ஜெர்மனி என்றும், ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதி கிழக்கு ஜெர்மனி என்றும் இருந்த காலத்தில்எல்லா நாடுகளில் இருந்தும் அகதிகள் வந்து ஜெர்மனிக்கு வந்து சேர்வது போல் இலங்கையிலிருந்தும் வருகிறார்கள்.  வெவ்வேறு காலகட்டங்களில் ஜெர்மனிக்கு வந்த இரண்டு ஈழத்தமிழரின் கதையிது.

இலங்கையில் நடக்கும் குளறுபடிகள், கிழக்கு ஜெர்மனி One day transit visa கொடுத்து அகதிகளை மேற்கு ஜெர்மனிக்குத் தள்ளுவதுமேற்கு ஜெர்மனி கிழக்கு ஜெர்மனியின் CurrencyDevalue செய்வது, அகதி முகாம்கள், ஜெர்மனியின் அகதி அனுமதி/நாடுகடத்தல் பின்னிருக்கும் அரசியல் மற்றும் வழக்கறிஞர்கள்இலங்கையில் இருந்து வெளிநாட்டுக்கு அனுப்பும் ஏஜண்டுகள் பெண்களிடம் முறைகேடாக நடந்து கொள்வது, கிழக்கு ஜெர்மனியில் இருந்து தாய்நாட்டுக்குப் பணம் அனுப்பத் தடைகள் என்று ஏராளமான வரலாற்றுத் தகவல்கள் மெல்லிய Storylineல் ஒன்றாகக் கலந்திருக்கின்றன.

இலங்கையின் வர்க்கபேதம்சமூகப் பாசாங்குகள்சிங்களர்களின் யதேச்சதிகாரம், யார் உண்மையில் அகதியோ அவர்களுக்குக் குடியுரிமை கிடைக்காது நாடு கடத்தப்படுவதும், சமூக விரோதிகள் அவர்கள் நடுவே புகுவதும் போன்றவை நாவலில் சன்னமான தொனியில் ஒலிக்கின்றன.  அகதி வாழ்க்கையை மட்டுமன்றி ஒரு நாட்டின் அரசியல், வரலாற்றையும் சேர்த்துச் சொல்லும் நாவலிது.  புலம்பெயர்ந்தோரால் தான் தமிழ்நாவல் எல்லைகளை விஸ்தரிக்கமுடியும் என்பது மீண்டும் மெய்ப்பிக்கப் பட்டிருக்கிறது.  அவசியம் வாசிக்க வேண்டிய நாவல்.

 பிரதிக்கு:

காலச்சுவடு 4652- 278525

முதல்பதிப்பு டிசம்பர் 2023

விலை ரூ. 200.


அகதியின் பேர்ளின் வாசல் –  ஆசி கந்தராஜா: – Saravanan Manickavasagam.





No comments:

Post a Comment