தக்காளி ஏன் சுவைக்கிறது...?
'அஜினமோட்டோ' ( Ajinomoto -“Essence of Taste”).
இது இல்லாத சைனீஸ் உணவு வகைகளே இல்லை. 'அஜினமோட்டோ' சேர்க்காவிட்டால், சைனீஸ் சாப்பாடு 'சப்'பென்று இருக்கும்.
பண்டைய கால சீனர்களும்,
ஜப்பானியர்களும்
தங்களின் உணவில் ஒருவித கடற்பாசியை சேர்தார்கள். அந்த கடல்பாசி புதுவித சுவையை
கொடுப்பதை உணர்ந்தார்கள். இந்த கடல் பாசியில் அப்படி என்ன இருக்கின்றது...? என்று 1908 ம் ஆண்டு, ஆராய்ச்சியில் இறங்கினார்
ஒரு ஜப்பானிய பேராசிரியர். கூடுதல் சுவைக்கு காரணம் மொனோ சோடியம் குளுட்டாமேட் -MSG-
(Mono sodium glutamate) என்ற வேதிப்பொருள்தான்
என்பதை அறிந்தார். பின்பு அதிக ஆராய்ச்சி செய்து, இந்த மொனோ சோடியம் குளுட்டாமேட்டை எப்படி கடல் பாசியில்
இருந்து பிரித்து எடுப்பது என்ற ரகசியத்தை கண்டு பிடித்தார். உடனே ஒரு பணக்கார
ஜப்பானிய நிறுவனம், பேராசிரியரை நண்பனாக்கி, அந்த ரகசியத்தை
பெற்றுக்கொண்டது. பின்பு அதை வர்த்தக ரீதியாக தயாரித்து விற்பனை செய்தது. இந்த
நிறுவனம்தான் அஜி-நோ-மோட்டோ (Aji-no-moto).
மொனோ சோடியம் குளுட்டாமேட் -MSG- (Mono sodium glutamate) என்ற வேதிப்பொருளை
அஜி-நோ-மோட்டோ (Aji-no-moto)
என்ற ஜப்பானிய
நிறுவனம், செயற்கை முறையில்
தயாரித்ததால், அதன் கம்பெனி பெயரான 'அஜினமோட்டோ'வே (Aji-no-moto) இந்த வேதிப் பொருளின் பெயராகி பிரபலமாகி விட்டது.
உதாரணமாக, Photo copy
என்றால்
சிலருக்கு புரியாது. இதையே 'ஜெராக்ஸ்' என்று சொல்லுங்கள்.
புரிந்து விடும். ஜெராக்ஸ் என்பது ஒரு நிறுவனத்தின் பெயர்.
இனி தக்காளி விசயத்துக்கு வருகிறேன்.
இந்த மொனோ சோடியம் குளுட்டாமேட் MSG (Mono sodium glutamate) தக்காளியில் “இயற்கையாக”
இருப்தாலேயே தக்காளி சுவைக்கிறது. இதனாலேயே எமது உணவுத் தயாரிப்பில் தக்காளி
முதலிடம் வகிக்கிறது.
செயற்கையாக தயாரிக்கப்பட்ட 'அஜினமோட்டோ' உப்பை அதிகளவில் உணவில்
சேர்ப்பது சௌக்கியத்துக்கு தீங்கானது.
சைனீஸ் உணவுப் பிரியர்களே உசாராக இருங்கள்....!
No comments:
Post a Comment