ஆசி கந்தராஜாவின் டயறிக்குறிப்பு:
தாவரத்துக்கு நல்ல கல்சியம் பசளை என்று சொல்லி, பலர் முட்டைக்
கோதுகளை நொருக்கி மண்ணுடன் கலப்பதுண்டு. முட்டைக் கோதிலுள்ள கல்சியம், கல்சியம் காபனேற்
(சுண்ணாம்புக் கல்) வடிவத்திலேயே உண்டு. இதிலுள்ள கல்சியம் அயன்கள் இலகுவில்
வெளிவரமாட்டாது. எனவே முட்டைக்கோதிலுள்ள கல்சியம் உடனடியாகவே தாவரத்துக்குப்
போய்ச்சேரும் என எண்ணவேண்டாம். குறைந்தது இரண்டு முன்று வருடங்களுக்கு மேல்
எடுக்கும்.
கல்சியம் குறைபாடு இருந்தால் கல்சியம் நைற்றேற் உரத்தை
வாங்கிப் போடவும்.
தக்காளிக் காயின் குண்டிப்பகுதி (குண்டி, நல்ல தமிழ்ச்சொல்) கறுப்பாகி பழமாவதற்கு முன்பே அழுகிவிடுவதை
அவதானித்திருப்பீர்கள். இது கல்சியக் குறைபாட்டால் வருவது.
கல்சியம், தாவரத்தில் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு இடம்பெயராத
காரணத்தாலேதான் கல்சியம் (சுண்ணாம்பு) பவுடரை கரைத்து விவசாயிகள் தெளிப்பதுண்டு.
கொசுறுச் செய்தி: கல்சியம் காபனேற்றை (சுண்ணாம்புப்பாறை) 800 பாகை C வெப்பநிலையில் எரித்தால் பெறப்படுவது கல்சியம் ஒக்சைட்
(சுண்ணாம்பு துகள்கள்). இதற்கு
நீர்விட்டுக் கரைத்தால் வருவது, கல்சியம் கைற்றொக்சைட் (வெத்திலையுடன் போடும் சுண்ணாம்பு).
No comments:
Post a Comment