Wednesday 6 January 2021

சிலீப் அப்னியா 

(Sleep apnea)


ண்பன் ஒருவன் சமீபத்தில் வாகனம் ஓட்டும்போது தூங்கியதால் விபத்து ஏற்பட்டு மரணமானான். அவனுக்கு சிலீப் அப்னியா குறைபாடு இருந்ததாக பின்னர் தெரியவந்தது.

சிலீப் அப்னியா என்றால் என்ன?

இரவில் நீங்கள் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும்போது, உங்களை அறியாமலே உங்கள் தொடர்சுவாசம் தடை செய்யப்படுவதை, சிலீப் அப்னியா என்பார்கள். இதனால் உங்கள் மூளைக்கும் மற்றைய உடல் உறுப்புக்களுக்கும் செல்லும் பிராணவாயு தடைப்படும்.

இது நோயல்ல. ஒரு குறைபாடே!

சத்தம் போட்டுக் குறட்டை விடுதல், நித்திரை தடைப் படுதல், ஆழ்ந்த நித்திரையில் மூச்சுத் திணறுதல், காலையில் தலைவலி, சீறிச்சினத்தல், அளவிற்கு அதிகமான பகற்தூக்கம், வாகனம் செலுத்தும் போது தன்னை மறந்து தூங்குதல். அதனால் விபத்து, உணர்ச்சி வசப்படுதல், கோர்வையாக ஒன்றைப் பேச முடியாத நிலை, அவதானக் குறைவு, மனவழுத்தம் என்பன, சிலீப் அப்னியா குறைபாட்டால் வருபவை.

இதன் காரணமாக இருதயம், சிறுநீரகம் ஆகிய உள் உறுப்புக்கள் பாதிப்படைவதுடன் உங்கள் தாம்பத்திய வாழ்வும் பாதிக்கப்படும்.

இப்போது சொல்லுங்கள் உங்களில் எத்தனைபேருக்கு மேலேசொன்ன அறிகுகுறிகள் இருக்கின்றன?

இருந்தால், உங்கள் குடும்ப வைத்தியரிடம் முறையிடுங்கள். அவர் அதற்குரிய ஒழுங்குகளைச் செய்வார்.

இதற்காக உங்களை ஓரிரவு தங்கவைத்து, நீங்கள் தூங்கும்போது அதற்குரிய பரிசோதனைகளை (Sleep study) செய்வார்கள்.

உங்களுக்குச் சிலீப் அப்னியா இருப்பதைக் கண்டறிந்தால் அதற்குரிய காற்று செலுத்தி இயந்திரத்தை (CPAP - Continuous Positive Airway Pressure) கொடுத்துப் பரிசோதிப்பார்கள்.

பலன் கிடைக்கும் பட்சத்தில், நீங்கள் உங்களுக்கான இயந்திரத்தை வாங்கிப் பலனடையமுடியும். இதற்கு மருந்தில்லை.

இயந்திரம் என்றவுடன் பயப்படாதீர்கள். பல விதமான சிறிய இயந்திரங்கள் இருக்கின்றன.

இதைப்பாவித்த பலர் புதிய மனிதர்களாக மாறி மகிழ்ச்சிகரமாக வாழ்வதை நான் அறிவேன்.

குறிப்பு: உடல்பருமன் உள்ளவர்களுக்கு இக்குறைபாடு இருக்கும் சாத்தியம் அதிகம்.

ஆசி கந்தராஜா

No comments:

Post a Comment