Friday, 29 October 2021

வீரகேசரி Metro News வாரஇதழில் எழுதும் புனைவுக்கட்டுரைத் தொடர்.

நாட்டை நினைப்பாரோ...' (1)

ஆசி கந்தராஜா

1. காவா சடங்கு

காலையில் காவா (Kava) அருந்தும் சடங்கு. அதைத் தொடர்ந்தே மாலை ஒரு மணிக்குமாநாட்டின் முதல் அமர்வு எனச் சொன்னார்கள். சர்வதேச மாநாடொன்றில் இந்த ஒழுங்குமுறைபேராசிரியர் சுந்தரமூர்த்தியின் மனதுக்கு நெருடலாக இருந்தது. பிஜியின் தலைநகர் சூவாவில்தென் பசிபிக் நாடுகளுக்கான பல்கலைக் கழகமொன்றுண்டு. அங்கு நடந்த விவசாய மாநாடான்றில்ஆராய்ச்சிக் கட்டுரை சமர்ப்பிக்கச் சென்றபோதே அவருக்கு இந்த அனுபவம் ஏற்பட்டது.

 பசிபிக் தீவுகளில் இயற்கையாக வளரும் தாவரம் 'காவா'. இது மிளகு மற்றும் வெத்திலை குடும்பத்தைச் சேர்ந்தது. இதன் வேரை காயவைத்து இடித்து மாவாக்கிதண்ணீரில் ஊறவிட்டு வடிகட்டிகாவா பானத்தைத் தயாரிப்பார்கள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தேதென் பசுபிக் நாடுகளான பிஜிஹவாய்டோங்காநியூகினியா உள்ளிட்ட தீவுகளில்திருமணம்பிறப்புமரணம் உள்ளிட்ட சடங்கு சம்பிரதாயங்களில் காவா பானம் முக்கிய பங்கு வகிக்கிறது.

காவா என்ற பானத்தைபேராசிரியர் சுந்தரமூர்த்தி முன்பு சிட்னியில் வசிக்கும் அவரது பிஜி நண்பரின் வீட்டிலும் அருந்தியிருக்கிறார். களிமண்ணை தண்ணீரில் லேசாக கலந்து விட்டது போன்ற கலங்கல் திரவம் அது. மரத்தால் செய்யப்பட்ட பெரிய பாத்திரமொன்றில் வைத்திருந்தார்கள். பாயை விரித்து பாத்திரத்தைச் சுற்றி நிலத்தில் இருந்தவாறுதும்பு செதுக்கிய தேங்காய்ச் சிரட்டையில் காவாவை அள்ளி அள்ளி மாலை வரை குடித்தார்கள். சிரிப்பும் அரட்டையும் பின்னர் தூக்கமும் காவாவுடன் சேர்ந்த சமாச்சாரங்கள் எனஅன்று அவர் தெரிந்து கொண்டார். காவா அவருக்குக்கு ருசிக்கவில்லை. தொண்டை கட்டியது. நெடுநேரம் தலை கனத்து அம்மலாகவும் இருந்தது.

பிஜிக்கு வந்தபோதுமீண்டும் காவா அருந்த வேண்டிய சூழலில் சிக்கிக் கொண்டார். மாலை அமர்வில்அவர் ஆராய்ச்சிக் கட்டுரை வாசித்து கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டும். அப்போது தலை அம்மலாக இருக்கும் என்ற பதகளிப்பில் காவா குடிப்பதை தவிர்க்க முயன்றார். அவர்கள் விடவில்லை. காவா நிரம்பியபெரியதொரு சிரட்டையை கையில் திணித்துவிட்டார்கள். குடிப்பதுபோல பாசாங்கு செய்தவாறு அருகிலிருந்த பிஜி பேராசிரியரிடம் காவா சடங்கு பற்றிக் கேட்டார்.

காவா சடங்கு பற்றி நீங்கள் என்ன அறிந்து வைத்திருக்கிறீர்கள்எனக் கேட்டுஅவரது கேள்வியை அவரிடமே திருப்பிவிட்டார்பிஜிநாட்டு பேராசிரியரியர்.

காவா மிதமான போதை கொண்ட பானம் என்பது எனக்குத் தெரியும். அது மூளைக்கும் உடலுக்குமான தகவல் பரிமாற்றத்தை மந்தமாக்கிஉடம்பைச் சோர்வடையச் செய்யும் என்று வாசித்திருக்கிறேன். இப்படியானதொரு பானத்தை மாநாட்டுக்கு முன்போ அல்லது அரசமட்டத்திலான பேச்சு வார்த்தைகளின்போதோநீங்கள் சடங்கு சம்பிரதாயமாக அருந்துவதைத்தான் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. என காவா பானம் பற்றிய தனது அபிப்பிராயத்தைச் சொன்னார்சுந்தரமூர்த்தி.

இந்தியர்களுக்கு எதிரான துவேச உணர்வுகள்பிஜியில் சாதாரண மட்டத்தில் மட்டுமல்ல பல்கலைக் கழக மட்டத்திலும் ஊடுருவியுள்ள நிலையில் இதுபற்றித் தொடர்ந்து பேச சுந்தரமூர்த்தி விரும்பவில்லை. இருப்பினும் காவா பற்றிய பூர்வீக தகவல்களை தெட்டம் தெட்டமாக அங்குள்ள பிஜி நண்பர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டார்.

பிஜி நாட்டின் மூதாதையர்கள் காடுகளுக்கு வேட்டையாடச் சென்றபோதுஒருவகைத் தாவரங்களின் வேர்களைக் கடித்த 'அகளான்கள்' (ஒரு வகை எலிகள்) போதையில் மயங்கிக் கிடப்பதைக் கண்டார்களாம். அவர்களும் அந்த வேர்களை உண்டபோது போதையேறவேஅதையே தங்களின் வழக்கமாக்கிக் கொண்டதாக பிஜி நண்பர்களிடம் கேட்டு சுந்தரமூர்த்தி அறிந்து கொண்டார்.

பல்கலைக் கழகத்தில் படிக்கும் பிஜி இந்திய வம்சாவழி இளைஞன் ஒருவனே அங்கு காவா தயாரிப்புக்கும்அதைத் தொடர்ந்த காவா சடங்குக்கும் பொறுப்பாக இருந்தான்.

காவாவின் போதையில் அங்குள்ள அனைவரும் கதிரையில் சாய்ந்தபடி அரை மயக்கத்தில் இருந்தார்கள். இதனால் வேலை சற்றுக் குறையவே, 'ஹலோ சார்என உரிமை கொண்டாடிசுந்தரமூர்த்திக்கு அருகே இருந்த நாற்காலியில் வந்தமர்ந்துசேகர்-பிள்ளை எனத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.

பூர்வீக மக்கள் இங்கு பலர் இருக்ககாவா பானம் தயாரிப்பில் நீ எப்படிஎன சுந்தரமூர்த்தி கேள்வியை முடிக்கமுன் ஒரு வெடிச்சிரிப்புச் சிரித்தான் சேகர். பின்னர்அவர்களுள் ஒருவனை விட்டிருந்தால்அவனும் சடங்கின் நடுவில் இவர்களைப்போல படுத்துத் தூங்கியிருப்பான் என்றான் குரலைத் தாழ்த்தி.

பின்னர் எதற்காக தூக்கத்தை ஏற்படுத்தும் காவா பானத்தை ஒரு சடங்காகநிகழ்ச்சிக்கு முன்பு அருந்துகிறார்கள்எனக் கேட்டார்.

வெள்ளையர்கள் வைன் அருந்துவதைப் போலத்தான் இதுவும் என எடுத்துக் கொள்ளுங்களேன் என அதற்கு நியாயம் கற்பிக்க முனைந்தான் சேகர்.

வைன் என்பது அல்கஹோல். அளவுடன் குடித்தால் உற்சாகத்தை ஏற்படுத்தும். ஆனால் காவாவில் இருப்பது போதைப் பொருள். அது தசைகளை சோர்வடையச் செய்து நாக்கை மரத்துப் போகச் செய்யும். சோர்வையும் நித்திரையையும் ஏற்படுத்தும் இந்தப் பானம்ஆராய்ச்சி மாடொன்றுக்கு முன்பு தேவையா?

நீங்கள் சொல்வதில் நியாயம் இருக்கிறது. ஆனால் காவாவுக்கென ஒரு பாரம்பரியமான கலாசாரப் பின்னணி இருக்கிறது. பிஜியின் உண்மையான பூர்வீக குடிமக்கள் எகிப்திலிருந்து தன்சானியா என இன்று அழைக்கப்படும் ரங்கனிக்கா வழியாகபிஜித்தீவில் வந்து குடியேறியவர்கள் எனச் சொல்லப்படுகிறது.

காவாவின் வரலாற்றுப் பின்னணியை கொஞ்சம் விளக்கமாகச் சொல்லு என விட்ட இடத்தை நினைவு படுத்தி அவனை மீண்டும் காவா பற்றிய சம்பாஷனைக்குள் இழுத்தார்.

பிஜிய நகரங்களில் காணப்படும் மட்பாண்ட ஓவியங்களில் இருந்து பிஜியில் கிமு 3500 ஆண்டுகள் வாக்கில் குடியேற்றம் நிகழ்ந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. பிஜித் தீவுகளில் குள்ளமாக இருப்பவர்களில் அனேகர் பொலினேசியர்கள். பொலினேசியர்களின் மூதாதையரே இங்கு முதன் முதலில் குடியேறியிருக்கலாம் என நம்பப்பட்டாலும்மெலனேசியர்களின் வருகைக்குப் பின்னர் இவர்களில் பலர் தொங்காசமோவாமற்றும் ஹவாய் தீவுகளுக்கு சென்றிருக்கலாமெனத் தொல்லியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் தற்போதைய மக்கள் தொகையில் பெரும்பான்மையினர் மெலனேசியர்களே.

வந்தவர்கள் குழுக்களாகதங்களுக்கான எல்லையை தாங்களே வகுத்துக் கொண்டுகற்களாலும் கம்புகளாலும் மற்றைய குழுக்களுடன் சண்டை பிடித்துக் கொண்டு வாழ்ந்திருப்பார்களேஎன உரையாடலைத் தொடர அடி எடுத்துக் கொடுத்தார் சுந்தரமூர்த்தி.

உண்மைதான். காவா சடங்கு பற்றிய உங்களின் கேள்விக்கான பதிலும் இதற்குள் தான் அடங்கியிருக்கிறது. இயல்பு நிலையில்இவர்கள் மூர்க்க குணம் கொண்டவர்கள். கையைக் காலை ஆட்டிஉரத்த குரலில் 'அடிக்கிறேன் பிடிக்கிறேன்எனப் பேசிக் கொள்வார்கள். பொலினேசியர்ளுக்கும் மெலனேசியர்களுக்கும் அடிக்கடி எல்லைத் தகராறு ஏற்படும். அப்போது வார்த்தைகள் தடித்து ஆக்ரோஷமாகத் தாக்கிக் கொள்வார்களாம். இறுதியில் குழுத் தலைவர்களுக்கு இடையில் நடைபெறும் பேச்சு வார்த்தைகளின் போதுமுதலில் காவா பானம் அருந்தி தங்களை சாந்தப்படுத்திக் கொள்வார்களாம். அதுவே இன்றுவரை அரச மட்டத்திலும் சம்பிரதாயமாகி விட்டது என சேகர் முத்தாய்ப்பு வைத்தான்.

காவா மயக்கத்தில் அரைத் தூக்கத்தில் அருகிலிருந்த பிஜி பேராசிரியர் ஒருவர்இந்த சம்பாஷனைகளைக் கேட்டிருக்கவேண்டும். சேகரைப் பார்த்துப் புன்னகைத்தார். அவரது புன்னகையின் அர்த்தத்தை புரிந்துகொண்ட சேகர் மெதுவாக அங்கிருந்து எழுந்து சென்றுமண்டபத்துக்கு வெளியே நின்ற மாமரத்தின் கீழே போடப்பட்ட சிமெண்ட் வாங்கில் அமர்ந்து ஐபாட்டை நோண்டினான்.

(தொடரும்),

No comments:

Post a Comment