கல்லாக்காரம்
பனங்கற்கண்டு அல்லது கல்லாக்காரம், சித்த வைத்தியத்தில் முக்கிய பங்கு வகிப்பது. இது, பனை மரத்திலிருந்து
கிடைக்கும் பதநீரைக் (கருப்பணி) காய்ச்சிப் பெறப்படுவது. நூறு லிட்டரகள்; பதநீரைக் காய்ச்சி, ஐந்து கிலோ பனங்கற்கண்டு
தயாரிக்கலாம்.
இதில் கால்சியம், இரும்பு, வைட்டமின்கள் நிறைந்துள்ளன என்றும் நீரிழிவு நோயின் பிடியிலிருந்து நம்மை நாமே காப்பாற்றிக் கொள்ள பனங்கற்கண்டை
பயன்படுத்துவது நல்லது எனவும் அறிவியல் தகவல்கள்
சொல்கின்றன.
தினமும் நான் சிறு துண்டு பனம் கற்கண்டை வாயில்போட்டு உமிழ்ந்தபடி, தேத்தண்ணி கோப்பி
குடிப்பதுண்டு. சீனி, சர்க்கரை பாவிப்பதில்லை.
பசும்பாலுடன் மிளகும் பனங்கற்கண்டும் சேர்த்து கொதிக்க வைத்துக் குடிப்பது
எங்கள் ஊர் இருமல் வைத்தியம்.
பனம் கற்கண்டுடன் தேன்,
எலுமிச்சைச்சாறு, இஞ்சிச்சாறு, தரமான பிரண்டி (Brandy) என்பன கலந்து, இரவு படுப்பதற்கு முன்
சொட்டுச் சொட்டாகப் பருகுவது, எனது நவீன இருமல்
மருந்து. ஓரிரு நாளில் இருமல் பறந்துவிடும். அநுபவத்தில் சொல்கிறேன், செய்து பாருங்கள்.
பிரண்டிக்கு பதிலாக பனஞ்சாராயம் சேர்ப்பது அதி விஷேசம் என்கிறான் சிட்னியில்
வசிக்கும் நண்பக் ஓருவன். பிரண்டியையும் பனஞ்சாராயத்தையும் மருந்துபோலச்
சேர்க்கவேண்டும். போதைக்காக அல்ல!
பனம்பொருள் அபிவிருத்தி சபை தயாரித்த பனம் கற்கண்டு தமிழ்க் கடைகளில்
கிடைக்கும். படத்திலுள்ள பனம் கற்கண்டு வடமராட்சித் தயாரிப்பு.
No comments:
Post a Comment